ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய்

Huawei
Last Updated: புதன், 1 ஆகஸ்ட் 2018 (15:18 IST)
ஸ்மார்ட்போன் சந்தையில்  கொடிகட்டி பறந்த ஆப்பிள் நிறுவனம் தற்போது தன்னை நிலைநாட்டிக் கொள்ள போராடி வருகிறது.

 
ஆப்பிள் நிறுவனம் ஒருகாலத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் கொடிகட்டி பறந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்ட் இயங்குதளம் அறிமுகமான பின்னர் ஆப்பிள் போன்களுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் முதலில் களமிறங்கியது.
 
சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கிடையே வெகு நாட்களாக போட்டி நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு முன் ஸ்மார்ட்போன் சந்தையில் சயோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி புரட்சி செய்தது.
 
சயொமி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்த பின் அனைத்து நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் போட்டியாக இருந்தது. சயோமி நிறுவனம், குறைந்த விலையில் நல்ல அமைப்புகளுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதே இந்த போட்டிக்கு காரணம்.
 
சயோமியை அடுத்து ஹூவெய், மோட்டோ, ஓப்போ, வீவோ போன்ற நிறுவனங்கள் போட்டிக்கு வந்தனர். இந்த நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி போட தொடங்கிய பின் சாம்சங் நிறுவனமும் ஆட்டம் காண தொடங்கியது.
 
இந்நிலையில் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சீனாவைச் சேர்ந்த ஹூவெய் நிறுவனம் 5 கோடியே 42 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.
 
இதன் மூலம் மூன்றாம் காலாண்டில் 40 புள்ளி 9 சதவிகித வளர்ச்சி கண்டுள்ள அந்த நிறுவனம் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை முந்தியது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :