ஆன்லைன் ஹேக்கர்களிடம் சிக்காமல் இருக்க எளிய வழி
சமூக வலைதளங்களில் தொடங்கி ஆன்லைன் ஷாப்பிங், வங்கி சேவை என இணையதள பயன்பாட்டில் அனைத்திற்கும் பாதுகாப்பான சேவையை கடைப்பிடிக்க, கடவுச் சொல்லை பாதுகாக்க எளிய வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் துவங்கி, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் வங்கி சேவை வரை அனைத்திற்கும் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி வருகின்றோம். இவை அனைத்திற்கும் பாஸ்வேர்டு என்ற கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட யூஸர் அக்கவுண்ட் எனப்படும் கணக்கு குறியீடுகளை தான் பயன்படுத்துகின்றோம்.
கடவுச்சொல்லை பாதுகாக்க எளிய முறை:-
அதிக கடினமான மற்றும் நீண்ட கடவுச்சொல்லை ஹேக்கர் மட்டுமில்லை வேறு யாராலும் யூகிக்க முடியாது. கடவுச்சொல் தேர்வு செய்யும் போது உங்களது குழந்கைள் பெயர், பிறந்த தேதி மற்றும் இதர தனிப்பட்ட தகவல்களை சேர்க்க கூடாது. நீண்ட கடவுச்சொல்லில் அதிக வார்த்தைகள், இடையில் எண் போன்றவைகளை பயன்படுத்தினால் உங்களது கடவுச்சொல் உங்களை தவிற வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கும்.
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத சேவைகளின் கணக்குகளை டீ-ஆக்டிவேட் செய்வது நல்லது. இவைகளை கடைப்பிடித்தாலே போதும் உங்கள் கணக்குகளை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாத்து விடலாம்.