ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (16:40 IST)

மோசடி அப்ளிகேசன்களை தூக்கிய கூகிள்! – டெவலப்பர்களுக்கு எச்சரிக்கை!

கூகிள் ப்ளே ஸ்டோரில் மோசடி செய்து வந்த 600 மொபைல் அப்ளிகேசன்களை நீக்கியுள்ளது கூகிள்.

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் அனைவராலும் பிரபலமாக உபயோகிக்கப்படும் மொபைல்கள் ஆண்ட்ராய்ட் மென்பொருளில் இயங்குபவையாக உள்ளன. அண்ட்ராய்டில் நமக்கு தேவையான அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்து கொள்ள கூகிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டதுதான் கூகிள் ப்ளே ஸ்டோர். பலவிதமான அப்ளிகேசன்களை கொண்ட ப்ளே ஸ்டோரில் டெவலப்பர்கள் சிலர் போலியான அப்ளிகேசன்களை பதிவேற்றி அதன்மூலம் வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்யும் வேலையையும் செய்து வருகின்றன.

இதுகுறித்த புகார்களை பரிசீலனை செய்த கூகிள் மோசடி செய்யும் 600 டெவலப்பர்களையும், அப்ளிகேசன்களையும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 10 ஆயிரம் மோசடி அப்ளிகேசன்கள் நீக்கப்பட்டதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ப்ளே ஸ்டோர் தவிர வேறு எந்த தளத்திலும் அப்ளிகேசன்களை டவுன்லோட் செய்ய வேண்டாம் எனவும் கூகிள் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.