வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (17:04 IST)

கேம் ஸ்கேனரை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கிய கூகுள் – காரணம் இதுதான்!?

பெரும்பான்மை ஆண்ட்ராய்டு பயனாளர்களால் உபயோகிக்கப்படும் ஆப்களில் முக்கியமான ஒன்றான கேம் ஸ்கேனரை ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது கூகிள்.

உலகம் முழுவதும் அதிகமானோர் உபயோகிப்பது ஆண்ட்ராய்டு போன்கள்தான். அதில் பலவகையான உபயோகத்துக்கும் ஏற்றவாறு பல அப்ளிகேசன்களை உபயோகித்து வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் கேம் ஸ்கேனர்.

இந்த கேம் ஸ்கேனர் மூலம் நமக்கு தேவையான ஆவணங்களை புகைப்படமெடுத்து க்ளீன் செய்து பிடிஎப் போன்ற கோப்பாக மாற்றி பயன்படுத்த முடியும். இந்த அப்ளிகேசனை மில்லியன் கணக்கில் மக்கள் பயன்படுத்தி கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த அப்ளிகேசனை பயன்படுத்துவோர் மொபைல்களில் மால்வேர் வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் மொபைல்களில் உள்ள தகவல்களை ஹேக்கர்கள் திருடி கொள்ள முடியும் என கூறியிருக்கிறார்கள். இந்த அப்ளிகேசன் இலவசமாக பயனர்களுக்கு அளிக்கப்படுவதால் நிறைய விளம்பரங்கள் அதில் வருகின்றன.

அந்த விளம்பரங்களை கொண்டு மால்வேர் ஆண்ட்ராய்டு மொபைல்களில் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் கேம் ஸ்கேனர் அப்ளிகேசன் உடனடியாக ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இலவச செயலியை நீக்கிவிட்டு விளம்பரங்கள் அற்ற விலை கொடுத்து வாங்கும் அப்ளிகேசனாக மாற்றியிருக்கிறார்கள். கேம் ஸ்கேனர் அவசியமாக தேவைப்படுபவர்கள் விலை கொடுத்து அதை வாங்கி கொள்ளலாம் என்றும், அதில் மால்வேர் அபாயம் இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.