Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஃபேக் ஆப்ஸ்-ஐ கண்டறிவது எப்படி?


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 11 ஜூன் 2017 (09:47 IST)
ஸ்மார்ட்போன்களில் பல்வேறு போலி செயலிகள் பிளே ஸ்டோரில் காணப்படும். கூகுள் பிளே ஸ்டோரில் ஏராளமான செயலிகள் கிடைக்கின்றன. அதில் சில போலியாகவும் இருக்கக்கூடும்.

 
 
போலி செயலிகளை டவுன்லோடு செய்யும் போது மால்வேர் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. என்வே, போலி ஆப்ஸ்-ஐ எப்படி கண்டறிவது என தெரிந்துகொள்ளுங்கள்...
 
# செயலிகளை டவுன்லோடு செய்யும் முன் அதன் வெளியீட்டாளரை கவனிக்க வேண்டும். ஹேக்கர்கள் ஒரே பெயர் மற்றும் சின்னம் பயன்படுத்தி போலி செயலிகளை பதிவு செய்திருப்பர். 
 
# ஒரு செயலிக்கு பயனர்கள் வழங்கி இருக்கும் மதிப்பீடு மற்றும் கருத்துக்களை பார்க்க வேண்டும். 
 
# பெரும்பாலும் போலி செயலியின் வெளியீட்டு தேதி புதியதாக இருக்கும். ஒரிஜினல் செயலி வெளியாகி சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்தே போலி செயலிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
# போலி செயலிகளின் பெயரில் ஏதேனும் எழுத்து பிழை இருக்கும். இதன் மூலமாகவும் உண்மையான செயலியை எளிதாக அறிந்து கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :