ஃபேஸ்புக்கின் கேம் ரூம் அறிமுகம்
ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே ஆன்லைன் கேம் பிளார்ட்பார்மை அறிமுக செய்திருந்தது. இந்நிலையில் தற்போது கேம் பிரியர்களுக்கென்று விஷேசமான கேம் ரூம் என்ற புதிய கேமிங் பிளாட்பார்மை அறிமுகம் செய்துள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதில் சிறப்பானது ஆன்லைன் கேமிங். தற்போது மேலும் கேம் பிரியர்களுக்கு விஷேசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கேம் ரூம் என்று புதிய கேமிக் பிளாட்பார்மை அறிமுகம் செய்துள்ளது. இந்த கேம் ரூம் டெக்ஸ்டாப் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் மட்டும் செயல்படக்கூடியது. மேலும் இந்த கேம் ரூம் விண்டேஸ் 7 இயங்குதளத்திற்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளம் கணிகளில் மட்டுமே செயல்படும் என்று தெரிவித்துள்ளனர்.