Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் ஃபேஸ்புக்

facebook job" width="600" />
sivalingam| Last Modified திங்கள், 20 பிப்ரவரி 2017 (05:37 IST)
வேலையில்லா பட்டதாரிகள் இனிமேல் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கோ, அல்லது வேலைவாய்ப்பு தரும் பத்திரிகைகளையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை அனைத்து வேலை வாய்ப்பு குறித்தும் அறிந்து கொள்வதற்காக ஃபேஸ்புக் ஏற்பாடு செதுள்ளது.உலகின் நம்பர் ஒன் சமூக இணையதளமான ஃபேஸ்புக் தற்போது பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி பல ஆக்கபூர்வமான செயல்களுக்கு உதவுகிறது. அந்த வகையில் தற்போது வேலை தேடுபவர்களுக்கும், வேலைக்கு ஆட்கள் எடுப்பவர்களுக்கும் ஒரு புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முதல்கட்டமாக கனடா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி ஃபேஸ்புக்கில் இனிமேல் 'Jobs' என்ற புக்மார்கக்கை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வேலை தேடுவோர் பேஸ்புக்கில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதே போல் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களும் இந்த பகுதியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திறமையானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.இதில் மேலும் படிக்கவும் :