செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 8 ஜூலை 2017 (15:06 IST)

தேனீக்களுக்கும் கேமரா தொழில்நுட்பத்திற்கும் என்ன தொடர்பு??

துல்லியமாக புகைப்படம் எடுக்கும் கேமராக்களை பல நிறுவனங்கள் அளித்தாலும், துல்லியமான வண்ணங்களைப் பதிவிடும் கேமராக்கள் பெருமளவில் கிடையாது. 


 
 
ஒரு புகைப்படத்தில் மனிதனின் பார்வைக்கும், கேமரா பதிவிட்ட புகைப்படத்துக்கும் சில வேறுபாடுகள் இருக்கும். அந்த வேறுபாடுகள் வண்ணங்களில் பெருமளவு காணப்படும்.
 
இந்த வேறுபாடுகளை குறைக்க புதிய தொழில்நுட்பத்தை பற்றி கண்டறிய ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகம் முயற்சி செய்துவந்தது. 
 
இந்நிலையில், அதற்கான தீர்வினைக் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். தேனீக்கள் பார்வையில் உள்ள தொழில்நுட்பம் போல் பயன்படுத்தினால் மிக துல்லியமான புகைப்படம் எடுக்கும் கேமராக்கள் கண்டறியலாம் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்த தொழில்துட்பத்தை பற்றிய ஆராய்ச்சி தொடரும் என தெரிவித்துள்ளார்.