புதிய தொழில்நுட்பம் மூலம் தண்ணீரில் மதிக்கும் ஸ்மார்ட்போன் ஒன்றை பெங்களூரு இளைஞர் வடிவமைத்திருக்கின்றார்.
பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் ராஜ் நிறுவிய பாலோ ஆல்டோ சார்ந்த நிறுவனம் தான் கோமெட் கோர். இவர் தான் உலகின் முதல் மிதக்கும் ஸ்மார்ட்போனினை கண்டறிந்துள்ளார்.
இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் நீச்சல் குளம், கிணறு எனத் தண்ணீரில் விழுந்தால் மூழ்காமல், மிதக்கும் திறன் கொண்டுள்ளது.
இன்டிகோகோவில் அதிகளவு நிதியைப் பெற்று வரும் கோமெட் பயோயண்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். இதில் எவ்வித மிதக்கும் கருவியும் பொருத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.