Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாதுகாப்பு தொடர்பாக ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு

Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (14:09 IST)

Widgets Magazine

மொபைல் போனில் சேமிக்கும் தகவல்கள் எந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


 

 
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஸ்மார்ட்போன் விற்பனையும் இந்திய சந்தையில் அதிகரித்துள்ளது. சீன ஸ்மார்ட்போன்கள், மைக்ரோமேக்ஸ், ஆப்பிள், சாம்சங், மோட்டோரோலா போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மொபைகள் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகிறது.
 
ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்படும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் மத்திய அரசு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் வாடிக்கையாளரின் தகவல் மற்றும் மொபைலில் சேமிக்கப்படும் தகவல்கள் எந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து வரும் 28ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதனை மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார். சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான Vivo, Oppo, Xiaomi மற்றும் Gionee  ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
மேலும் சீன நிறுவனங்கள் இல்லாமல் Apple, Samsung, Motorola, Micromax உள்ளிட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் வசதி அறிமுகம்!

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் UPI வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் இனி வாட்ஸ்அப் ...

news

32 ஆண்டுகளாய் இருந்த எம்எஸ் பெயின்ட் நீக்கம்: மைக்ரோசாப்ட் அறிவிப்பு!!

விண்டோஸ் 10 அப்டேட்டில் இருந்து நீக்கப்படும் அம்சங்களில் பெயின்ட் இடம் பெற்றுள்ளதாக ...

news

ஜியோவின் இலவச மொபைலில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள இலவச ஜியோ போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்ற ...

news

தேனீக்களுக்கும் கேமரா தொழில்நுட்பத்திற்கும் என்ன தொடர்பு??

துல்லியமாக புகைப்படம் எடுக்கும் கேமராக்களை பல நிறுவனங்கள் அளித்தாலும், துல்லியமான ...

Widgets Magazine Widgets Magazine