வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (23:22 IST)

ஐபிஎல்-2021; டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 25வது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் தற்போது டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றதை அடுத்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

கொல்கத்தா அணியின் ரசல் 45 ரன்களும், சுப்மன் கில் 43 ரன்களும், எடுத்தனர். டெல்லி அணியை சேர்ந்த அக்சர் பட்டேல், லலித் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தநிலையில் 155 என்ற இலக்கை நோக்கிய டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

டெல்லி அணியில் தவான், பிரித்வ் ஷா, என்ற சூப்பர் ஓபன் அவர்களும் அதன்பின் ஸ்மித், ரிஷப் பண்ட், ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும் டெல்லி அணி அலட்டிக்கொள்ளாமல் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.