திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (12:59 IST)

இன்னைக்கு எங்க அப்பாதான் ஜெயிப்பார்! – சன் ரைசர்ஸ் டீ சர்ட்டில் வார்னரின் க்யூட் குழந்தைகள்!

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வார்னர் மகள்களின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். புன்சிரிப்பு மாறாத அவர் முகமும், இந்திய பாடல்களுக்கு குடும்பத்துடன் குதூகலமாக ஆடி அவர் போடும் டிக்டாக் வீடியோக்களும் இந்தியாவில் மிக பிரபலம்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் போட்டியிலும் வழக்கம்போல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் களமிறங்குகிறார். இந்நிலையில் தந்தையின் சன் ரைசர்ஸ் அணி டீ சர்ட்டை அணிந்தபடி வார்னரின் மூன்று மகள்களும் நிற்கும் க்யூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் வார்னரின் சன்ரைசர்ஸ் அணி மோத உள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து பலர் இன்னைக்கு உங்க அப்பாதான்மா ஜெயிப்பார் என அந்த குழந்தைகளுக்கு பதிலளிக்கும் வகையில் கமெண்டில் பதிலளித்துள்ளனர்.