1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 5 மே 2015 (09:36 IST)

ஐபிஎல்: 35 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட்டின் 38 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. 


 

 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 38 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின.
 
இரண்டு அணியிலும் தலா ஒரு வீரர் மாற்றப்பட்டிருந்தனர். ஹைதராபாத் அணியில் டிரென்ட் பவுல்ட்டுக்கு பதிலாக ஸ்டெயினும், கொல்கத்தா அணியில் பேட் கம்மின்சுக்கு பதிலாக ஜோகன் போத்தாவும் இடம் பெற்றனர். 
 
‘டாஸ்’ வென்ற ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா, கேப்டன் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
 
அணியின் ஸ்கோர் 57 ரன்னாக உயர்ந்தபோது கேப்டன் கம்பீர் (31 ரன்கள், 23 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில், இயான் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
 
இதையைடுத்து ராபின் உத்தப்பா (30 ரன்கள், 27 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். 
 
இதைத் தொடர்ந்து, களம் கண்ட ஆந்த்ரே ரஸ்செல் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். மனிஷ் பாண்டே 26 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
டென்டசாட் (8 ரன்கள்), ஜோகன் போத்தா (12 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (6 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
 
இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய யூசுப் பதான் 19 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 30 ரன்னும், பியுஷ்சாவ்லா 6 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
 
ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், கரண் ஷர்மா தலா 2 விக்கெட்டும், ஹென்ரிக்ஸ், பிபுல் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
இந்நிலையில், 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்த வண்ணம் இருந்தன.
 
டேவிட் வார்னர் (4 ரன்), நமன் ஓஜா (0), ஷிகர் தவான் (15 ரன்), இயான் மோர்கன் (5 ரன்) ஹனுமா விஹாரி (6 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
 
அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 41 ரன்னும், கரண்ஷர்மா 32 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுத்தது. 
 
இதனால் கொல்கத்தா அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.