1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2015 (09:13 IST)

ஐபிஎல் கிரிக்கெட்: பலத்த மழை அடித்துவெளுத்ததால் கொல்கத்தா - ராஜஸ்தான் போட்டி ரத்து

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடக்க இருந்த ஆட்டம் பலத்த மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.


 

 
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நேற்று மாலை நடப்பதாக இருந்தது.
 
ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியது. பிற்பகல் 2 மணியில் இருந்து இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்ததால் மைதானத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
 
இதைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் மழை நின்ற பிறகு தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனாலும் தண்ணீரை முழுமையாக வெளியேற்றி போட்டி நடப்பதற்கு உகந்த சூழல் ஏற்படவில்லை. மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது.
 
இதற்கிடையே 4 முறை ஆடுகளத்தை ஆய்வு செய்த நடுவர்கள் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ராஜேஷ் தேஷ்பாண்டே இருவரும் இரவு 7.15 மணிக்கு இந்த ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். 

இந்த சீசனில் ரத்தான முதல் ஆட்டம் இதுவாகும். இதையடுத்து இரு அணியும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன. 
 
இந்த போட்டிக்கு டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள் அதற்குரிய பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் இடையே நேற்று நடக்க இருந்த ஆட்டம் பலத்த மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.