1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : வியாழன், 7 மே 2015 (07:59 IST)

ஐபிஎல்: கெய்லின் அதிரடி சிக்சரால் 138 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 40 வது லீக் ஆட்டத்தில், கிறிஸ் கெய்லின் அதிரடி சிக்சரால் பெங்களூரு அணி 226 ரன்களைக் குவித்ததுடன், பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


 


 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 40 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
 
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. 
 
இதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயில் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.
 
அபாரமாக விளையாடிய கிறிஸ் கெயில் 57 பந்துகளில் 12 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உட்பட 117 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
 
விராட் கோலி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது.
 
பின்னர், களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு 227 ரன் எடுத்து வெற்றி பெருவது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பஞ்சாப் அணி,13.4 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
பஞ்சாப் அணியின் 7 வீரர்கள் கிளீன் போல்டு ஆயினர். இதன் மூலம் 138 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றியை பதிவு செய்தது.