வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (09:40 IST)

ஐபிஎல் கிரிக்கெட்: 97 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை விழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.


 

 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தபோட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டுவைன் ஸ்மித்தும், பிரென்டன் மெக்கல்லமும் களமிறங்கினர்.
 
இருவரும் தொடக்கம் முதலே அதிரயாக விளையாடினர். மூன்றாவது ஓவரில் ஸ்மித் (2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட) 22 ரன்கள் குவித்தார்.
 
இந்நிலையில், அனுரீத் சிங் வீசிய பந்தில் ஸ்மித் 26 ரன்கள் (13 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்த நிலையில் போல்டானார். 
 
இதைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். மறுமுனையில் மெக்கல்லம் தொடர்ந்து ரன் குவித்துக்கொண்டிருந்தார். இதனால் அவர் 33 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
 
இதைத் தொடர்ந்த, அவர் (44 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்ஸர்) 66 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
 
பின்னர் கேப்டன் தோனி ரெய்னாவுடன் கைகோர்த்தார். 16 ஆவது ஓவரின் ரெய்னா ரன் அவுட்டில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
 
இதனால் அவர் 29 ரன்களுடன் (25 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜடேஜாவுடன் இணைந்த தோனி அதிரடியாக விளையாடினார்.
 
இந்நிலையில், இருபது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 192 ரன்கள் எடுத்தது. தோனி 41 ரன்களுடனும் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்ஸர்), ஜடேஜா 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப், ஆரம்பத்திலேயே சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தினறியது. வீரேந்தர் சேவாக், கேப்டன் பெய்லி, மில்லர் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களுடன் திரும்பினர். இதைத் தொடர்ந்த களமிறங்கிய முரளி விஜய் (34 ரன்கள்) மட்மே எடுத்தார்.
 
பின்னர் வந்தவர்களில் மார்ஷ் (10 ரன்கள்), ரித்திமான் சாஹா (15 ரன்கள்), அனுரீத் சிங் (10 ரன்கள்) ஆகியோர் குறைந்த எண்ணிக்கையிலான ரன்களை மட்டுமே எடுத்தனர்.
 
இந்நிலையில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 97 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. பிரென்டன் மெக்கல்லம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.