1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sinoj
Last Modified: சனி, 28 மே 2022 (00:00 IST)

ஐபிஎல்-2022; ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி

இன்று நடைபெற்று வரும் 2வது பிளே ஆப் போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடியது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூர் அணி கடைசி 3 ஓவர்களில் மட்டும் 5 விக்கெட்டுகளை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக பெங்களூரு அணியின் ரஜத் படித்தார் 58 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் 158 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி விளையாடியது.

இதில், பட்லர் 106 ரன்களும், சஞ்சு சேம்சன் 23 ரன் களும், ஹஸ்வல் 21 ரன் களும் அடித்தனர், எனவே, 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது