1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 3 மே 2016 (12:21 IST)

நடுவரை முறைத்த ஜடேஜா; கடும் தண்டனை கிடைக்கும் - ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை

நடுவரின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 
கடந்த மே மாதம் 1ஆம் தேதி அன்று குஜராத் லயன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இதில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா 10.1 ஓவரில் அக்ஸர் பட்டேல் பத்தில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களில் அவுட் ஆனார். நடுவரின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜடேஜா நடந்துகொண்டார்.
 
ஐபிஎல் சட்டத்தின் 2.1.5 ஆவது விதிமுறையின்படி நடுவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது குற்ற நடவடிக்கை ஆகும். இதனால், ஜடேஜாவிற்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ரவீந்திர ஜடேஜா இனிவரும் போட்டிகளில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
 
இந்த போட்டியில் அக்ஸர் பட்டேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஆட்டநாயகன் விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.