வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (09:30 IST)

ஐபிஎல்: 9 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி

ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி  9 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றியை ருசித்தது.
8 ஆவது ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி  ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். 
இதில் ரன் மிஷின் ரகானே, வாட்சன் ஆகிய வீரர்கள் மந்தமான தொடக்கத்தை தந்தனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த வீரர்களால்  பெங்களூர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இறுதியில் ராஜஸ்தான் அணி வெறும் 130 ரன்களை மட்டுமே சேகரித்தது. 
 
பின் சொர்ப்ப இலக்கை நோக்கி விளையாட களமிறங்கியது பெங்களூர் அணி. இதில் கெயில் மற்றும் கோலி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் கெய்ல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த டி வில்லியர்ஸ் - கோலி ஜோடி இணைந்து ராஜஸ்தானின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இறுதியில் பெங்களூர் அணி 16 வது ஓவரில் 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இது பெங்களூர் அணிக்கு கிடைத்த 2 ஆவது வெற்று ஆகும்.