வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 2 மே 2015 (10:43 IST)

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பரபரப்பு வெற்றி

நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி 8 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி பரபரப்பு வெற்றியை ருசித்தது.
 
8 ஆவது ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை வீரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் மும்பை வீரர்களான சிம்மன்ஸ், பார்த்திவ் படேல், ரோகித் சர்மா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த அம்பதி ராயுடு, போலார்டு இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் போலார்டு 24 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் ராயுடு அரைசதம் கடந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் எடுத்தது. 
 
பின்னர் ராஜஸ்தான் அணி தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கியது. இதில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரகளான ரகானே மற்றும் வாட்சன் பெரிதாக பிரகாசிக்கவில்லை.  எனினும் சஞ்சு சாம்சன் தன் பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருக்கு பின் வந்த வீரர்கள் வரிசையாக ஏமாற்ற இறுதியில் மும்பை அணி 8 ரன் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை பெற்றது.