செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (07:45 IST)

பஞ்சாப் தோல்விக்கு காரணமான ஒரே ஒரு இன்ச்: பரிதாப தகவல்

பஞ்சாப் தோல்விக்கு காரணமான ஒரே ஒரு இன்ச்:
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் மேக்ஸ்வெல் அடித்த கடைசி பந்து ஒரே ஒரு இன்ச் முன்னாள் விழுந்ததால் அந்த அணி வெற்றி வாய்ப்பை இழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது 
 
நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தனர். இந்த நிலையில் 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தலா 74 மற்றும் 56 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
 
இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் 4 பந்துகளில் 7 ரன்கள் அடித்த பஞ்சாப் அணி கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் டை என்ற நிலையில் இருந்தது
 
அப்போது அதிரடியான மாக்ஸ்வெல் அடித்த பந்து பவுண்ட்ரி கோட்டிற்கு ஒரே ஒரு இன்ச் முன்னால் விழுந்தது. அந்த பந்து மட்டும் ஒரு இஞ்ச் தள்ளி விழுந்து சிக்ஸராக மாறி இருந்தால் போட்டி டை ஆகியிருக்கு என்பதும், அதன் பின்னர் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற்ற ஒரு வாய்ப்பு இருந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஒரே ஒரு இன்ச் இடைவெளியில் வெற்றியை இழந்த பஞ்சாப் அணியின் சோகத்தை அந்த அணியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்