புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By siva
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (19:20 IST)

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தல தோனி!

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தல தோனி!
இன்று நடைபெறும் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
 
கடந்த 7 போட்டிகளில் சென்னை அணி தற்போது முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் ஜெகதீசனுக்கு பதிலாக பியூஸ் சாவ்லா களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக நதீம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரு அணிகளின் விளையாடும் பதினொருவர் குறித்த தகவல் பின்வருமாறு:
 
சென்னை அணி: வாட்சன், டீபிளஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், கரன் சர்மா, பியூஷ் சாவ்லா
 
ஐதராபாத் அணி: டேவிட் வார்னர், பெயர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், ப்ரியம் கார்க், விஜய்சங்கர், ரஷீத் கான், நதீம், சந்தீப் சர்மா, கலீல் அகமது மற்றும் நடராஜன்