19 பந்தில் 49 ரன்கள்: ரஸல் அதிரடியில் கொல்கத்தா வெற்றி
இன்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது. 12 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தாவின் ரஸல் அதிரடியாக பவுண்டரி மற்றும் சிக்சர் மழை பொழிந்து 19 பந்துகளில் 49 ரன்கள் அடித்து 19.4 ஓவர்களில் அணிக்கு வெற்றியை தேடித்தாந்தார்
ஸ்கோர் விபரம்:
சன் ரைசஸ் ஐதராபாத்: 181/3 20 ஓவர்கள்
வார்னர்: 85
விஜய் சங்கர்: 40
பெயர்ஸ்டோ: 39
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 183/4 19.4 ஓவர்கள்
ரானா: 68
ரஸல்: 49
உத்தப்பா: 35