செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (19:35 IST)

மண்ணை கவ்விய பெங்களூர்; அடுத்தடுத்து விக்கெட்!!! 113 ரன்னில் ஆல் அவுட்!!!

ஹைதராபாத் எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 19.9 ஓவரில் 113 ரன்னில் ஆல் அவுட் ஆகியுள்ளது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.  மேட்ச் தொடங்கியதிலிருந்தே ஹைதராபாத் வீரர்கள் சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை குவித்தனர். ஜானி 114 ரன்களை எடுத்து அவுட்டானார். விஜய் சங்கர் 9 ரன்களில் அவுட்டானார். வார்னர் 100 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 
 
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கோலி 3 ரன்களிலும், டி வில்லியர்ஸ் 1 ரன்னிலும் பார்த்திவ் பட்டேல் 11 ரன்னிலும் அதைத்தொடர்ந்து ஆடிய வீரர்களும் தொடர்ச்சியாக அவுட்டானர். கிராண்ட்ஹோம் மட்டும் அதிகபட்சமாக 37 ரன்களை எடுத்து அவுட்டானார்.
 
இறுதியில் 19.5 ஓவரில் விக்கெட் அனைத்தையும் பறிகொடுத்து 113 ரன்களை எடுத்தது பெங்களூர் அணி.