பெங்களூரு அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

r
Last Modified சனி, 19 மே 2018 (17:59 IST)
பெங்களூரு அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.


 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. ஜெயப்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
 
ராஜஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக ராகுல் திரிபாதி 80 ரன்களும், கேப்டன் ரகானே 33 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் உமேஷ் யாதவ் 3 வீக்கெட்டுகளை கைப்பற்றினார்.
u
 
இந்த நிலையில் 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு அணி களமிறங்கவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :