திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (15:43 IST)

ஐபிஎல் கனவு அணியின் கேப்டன் யார் தெரியுமா?

பிரபல கிரிக்கெட் இணையதளமான கிரிக்இன்போ வெளியிட்ட ஐபிஎல் கனவு அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் கடந்த மாதம் தொடங்கி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடியது. 
 
இந்த ஐபிஎல் தொடருக்கான கனவு அணியின் வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது கிரிக்இன்போ. சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு கனவு அணிக்கான பட்டியல் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
கணவு அனியின் வீரர்கள் விவரம்: 
 
வில்லியம்சன் (கேப்டன், ஐதராபாத்), தோனி (விக்கெட் கீப்பர் சென்னை), சுனில் நரீன் (கொல்கத்தா), லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), அம்புதி ராயுடு (சென்னை), ரி‌ஷப்பந்த் (டெல்லி), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), உமேஷ் யாதவ் (பெங்களூர்), பும்ரா (மும்பை), ரஷித்கான் (ஐதராபாத்), ஆண்ட்ரூ டை (பஞ்சாப்).