செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Abimukatheesh
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2017 (20:47 IST)

மீண்டும் சொதப்பிய பெங்களூரு அணி 96 ரன்கள் எடுத்து தோல்வி

ஐபிஎல் தொடரில் இன்று நடைப்பெற்ற போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய புனே அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.


 

 
ஐபிஎல் 10வது சீசச் லீக் போட்டியில் இன்று பெங்களூர் மற்றும் புனே ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த புனே அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு இந்த முறையும் சொதப்பியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
 
இதன்மூலம் புனே அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. 360 டிகிரி பேட்ஸ்மேன் 3 ரன்களில் வெளியேறினார். பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி 48 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.
 
ஒட்டுமொத்த அணியில் 60 சதவீத ரன்களை கேப்டன் கோலி குவித்தார். மற்ற வீரர்கள் வழக்கம் போல் சொதப்ப இந்த முறையும் பெங்களூர் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.