Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பூனே- மும்பை அணிகள் மோதல்: பைனலுக்கு போவது யார்?


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 16 மே 2017 (12:46 IST)
ஐபிஎல் சீசன் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது குவாலிபையர் ஆட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. 

 
 
புள்ளி பட்டியலில் புனே அணி 2 வது இடத்தில் உள்ளது. மும்பை முதலிடத்திலுள்ள நிலையில், இன்று இவ்விரு அணிகளும் பிளே ஆப் சுற்றில் பலப்பரிட்சை நடத்த உள்ளன.
 
இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக பைனலுக்கு போக முடியும்.
 
அதேநேரம், இன்றைய போட்டியில் மும்பை அல்லது புனே என இரண்டில் எந்த அணி தோற்றாலும், பெங்களூரில் 19 ஆம் தேதி நடைபெறும் குவாலிபையர் 2 ரவுண்டில், எலிமினேட்டர் ரவுண்டில் வென்ற அணியோடு மோத அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். 


இதில் மேலும் படிக்கவும் :