Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனி ஒரு இரக்கமற்ற அரக்கன்: பழிப்பது போல் புகழும் கிளார்க்!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 17 மே 2017 (16:46 IST)
நேற்றய போட்டியில் மும்பைக்கு எதிராக தோனி விளையாடியதை பார்த்த பின் தோனியை அவமானபடுத்தி மோசமாய் பேசிய பலரும் வாயடைத்து போய்யுள்ளனர்.

 
 
புனே அணி மும்பையை எதிர்த்து வெற்றி பெற்றதற்கு தோனியின் அதிரடி ஆட்டம் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. புனே அணி 18 வது ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் குவித்ததற்கு தோனி ஒரு முக்கிய காரணம்.
 
இந்நிலையில் தோனியின் நேற்றைய ஆட்டத்தை பழிப்பது போல புகழ்ந்துள்ளார் முன்னாள் அஸ்திரேலிய கேப்டன் கிளார்க். தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி ஒரு அரக்கன் என பதிவிட்டுள்ளார் கிளார்க்.
 
தோனி அரக்கன் என அவர் கூறியது தோனி ஆட்டத்தின் போது எதிரணி மீது இரக்கமின்றி தனது அதிரடியை காட்டுவதால் கிளார்க் இவ்வாறு கூறிப்பிட்டுள்ளார். 
 
தோனி இப்போது அதிரடி வீரர் கிடையாது என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தோனியின் ஆட்டம் இருந்தது.


இதில் மேலும் படிக்கவும் :