1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்புக‌ள்
  3. சுத‌ந்‌திர ‌தின‌ம்
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (18:26 IST)

ஆசீர்வதித்தலின் வல்லமை

-மகாத்மா காந்தி
 
என்னோடு இருந்து நீங்கள் அனைவரும் எனது முயற்சிகளை ஆசீர்வதிக்கவும், எனக்காக பிரார்த்தனை செய்யவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாளை காலை உணவு நேரம் முதல் உண்ணாவிரதம் தொடங்குகிறது. இது, காலவரையற்றது. உப்பும், புளிப்பு எலுமிச்சையும் கலந்தோ அல்லது அவை இல்லாமலோ தண்ணீரை மட்டுமே பருகுவேன்.

எவ்வித வெளி நெருக்கடியும் இல்லாமல், கடமை உணர்வின் தூண்டுதலின் காரணமாகவே அனைத்து சமூகத்தினருடைய இதயங்களும் மீண்டும் ஒருங்கிணையும் போதுதான் முழு திருப்தியடைவேன். அப்போதுதான் எனது உண்ணாவிரதம் முடிவுக்கு வரும். சமூக ஒற்றுமையால் கிடைக்கும் வெகுமதியால், குறைந்துபோன இந்தியாவின் கெளரவமும், மங்கிவரும் இறையாண்மையும் மீ்ட்கப்பட்டு மீண்டும் ஆசியாவின் இதயத்திலும், அதன் மூலம் உலக அரங்கிலும் அதற்குரிய உடத்தைப் பெறும். 
 
 
வலி, கிளர்ச்சி, பசி ஆகியன மிகுந்த உலகத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லாததை நினைத்து பெருமையடைகிறேன். நண்பரும் இல்லை; பகைவரும் இல்லை. அப்படியொருவர் இருப்பின், என் மீது கோபம் கொள்ளட்டும். மானுடத்தை சீராக்குவதற்கு உறுதுணைபுரியும் உண்ணாவிரதத்தின் மீது நம்பிக்கையற்ற நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப் பொறுத்துக் கொண்டு, அவர்களுக்கு என்ன சுதந்திரம் உள்ளதோ அதே நடவடிக்கைச் சுதந்திரத்தை எனக்கும் அளிக்கட்டும். 
 
உயர்வானவனும், ஒரே வழிகாட்டியுமான எனது கடவுளைத் தவிர, வேறு யாருடைய அறிவுரையும் இன்றி நான் முடிவெடுக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். நான் தவறுகள் ஏதேனும் இழைத்திருப்பது எனக்குத் தெரியவந்தால், அதனை வீட்டுக் கூரையின் மேல் நின்று பொதுமக்களிடையே உரக்கத் தெரிவிக்கவும் தயங்கமாட்டேன். மேலும், எனது தவறை திருத்திக்கொள்ளும் நடவடிக்கையையும் மேற்கொள்வேன். நான் கூறுவது போன்றே உள் மனதின் குரலானது மறுத்துவிடாது என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்படுகிறது. வாக்குவதங்கள் விட்டொழிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, உரிய நடவடிக்கைக்கான ஆதரவினை எதிர்பார்க்கிறேன். இந்தியா முழுவதுமோ அல்லது டெல்லியிலேயினும் ஆதரவு கிடைத்தால், உண்ணாவிரதம் விரைவில் முடிவுக்கு வரும். 
 
ஹரிஜன், 18.01.1948
 
மொழிபெயர்ப்பு: சரவணன்.