திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By

சமையலறை பொருட்களைக் கொண்டு முகத்தை பளபளப்பாக்க....!

சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம். 
கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
 
தலை முடி செழித்து வளர வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும், இவ்வாறு செய்துவந்தால் பலன் தரும்.
 
வாழைப்பழத்தை நன்கு மசித்து முகத்திற்கு தடவுவதன் மூலம், சருமம் நல்ல ஆரோக்கியத்தையும், பொலிவையும் பெறும். இது ஒரு இயற்கையான பேஸ் பேக்காக உள்ளது. 
 
1/2 கப் ஆலிவ் ஆயில், 1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சரும பொலிவை அதிகரித்துக் காட்டும்.
 
கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் மசாஜ் செய்தால் கண்களில் ஏற்பட்டுள்ள கண்கருவளையம் மறைந்து விடும்.