Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கால் பாத ஆணி தவிர்ப்பது எப்படி?

சனி, 4 மார்ச் 2017 (07:04 IST)

Widgets Magazine

leg problem" width="600" />
கால் பாதங்களில் அழுத்தம் ஏற்படும்போது வெள்ளை நிறத்தில் தோல் தடித்து, சிறிய மேடு போல ஒரு தோற்றம் உருவாகும். பின்னர் மேற்புறத் தோல் உலர்ந்து, கொப்புளம் ஏற்பட்டு, கொஞ்சம் முற்றினல் சீழ் கோத்து, உடைந்து ரத்தப்பெருக்கும் ஏற்படும். இந்த பிரச்சனையால் நடக்கும்போதும் நிற்கும்போதும் தாங்க முடியாத வலி ஏற்படும். உள்ளங்கால்களில் மட்டும்தான் ஆணி ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். சில நேரங்களில் தேய்ந்த காலணிகளைப் பயன்படுத்துவது, கால்களைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவற்றின் காரணமாகக் கால் விரல்களின் பக்கவாட்டிலும் ஆணிகள் ஏற்படலாம்.

பாத ஆணியை தவிர்க்க மென்மையான சோப்பைப் பயன்படுத்திப் பாதத்தைக் கழுவலாம். பின்னர் கால்களைச் சுத்தம் செய்த பின்னர் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை போடலாம். மேலும் டிகெராட்டினிசேஷன் க்ரீம் (Dekeratinization creams) போன்ற மாய்ஸ்சரைசர் க்ரீம்களைக் கால்களில் தடவலாம். இந்த க்ரீம்களில் உள்ள கெராட்டின், இறந்த செல்களை அகற்ற உதவும். இந்த பிரச்சனைக்கு சுய சிகிச்சை செய்துகொள்வது தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, சர்க்கரை நோயாளியாக இருந்தால், கால்களை அகற்றவேண்டிய அளவுக்குப் பிரச்னை பெரிதாகலாம். எனவே, மருத்துவரை ஆலோசிப்பதுதான் சரியான வழி.

பாத ஆணி வராமல் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன?

கால்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பாதங்களைச் சோப்புப் போட்டுக் கழுவி, சுத்தமான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.

பாதத்துக்குப் பொருத்தமான சரியான அளவிலான காலணிகளை அணிய வேண்டும்.

அழுத்தமான ஷூக்களையோ, பெரிய அளவிலான (லூசான) ஷூக்களையோ அணியக் கூடாது.

கால் ஆணி பாதிப்புக்கு உள்ளானவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்களுடைய கால்களுக்குப் பொருத்தமான காலணிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் ஆண்டுதோறும் கால்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சாப்பிட்ட பின்னர் குளிக்கக்கூடாது என்று கூறுவது ஏன்?

நாம் அன்றாடம் செய்யும் விஷயங்களில் ஒன்று குளிப்பது. குளிப்பது என்றால் சும்மா தலையை ...

news

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் வெந்தயம்!

கரையும் நார்ப் பொருள்தான் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையை ஏற்படுத்தும். கரையாத ...

news

குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்ட சுண்டைக்காய்!

சுண்டைக்காய் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன. சுண்டையில் ...

news

உணவில் அடிக்கடி வெண்டைக்காயை சேர்த்தால் மூளை செயலிழப்பை தடுத்திடுமாம்!

இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் உடலுக்கு மிகவும் சத்தானவை. காய்கறிகளில் ...

Widgets Magazine Widgets Magazine