செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 மே 2021 (23:00 IST)

இருமலை கட்டுக்குள் கொண்டு வர உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

பெரியவர் முதல் சிறியவர்வரை சந்திக்க கூடிய பிரச்னைகளில் ஒன்றுதான் இருமல். இந்த இருமலால் பல அசௌரியங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய இருமலை கட்டுப்படுத்தக்கூடிய வீட்டு வைத்திய குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்.
 
தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள், ஆவிபிடித்தல், சுடு நீர் குளியல் போன்றவற்றின் மூலம் உடலை அடிக்கடி ஈரப்பதம் செய்துகொள்வதினால், இருமல் குறையும். மேலும், சுத்தமான குடிநீரை அடிக்கடி அருந்த வேண்டும், இதனால் தொண்டையில் படிந்துள்ள தூசி, சளி போன்றவை சுத்தம் செய்யப்படும்.
 
சளி தொந்தரவின் போது ஏற்படும் நீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் வழக்கமாக எடுத்து கொள்ளக்கூடிய, மூக்கில்விடும் சொட்டு மருந்துகளை  போட்டுக்கொள்ளலாம்.
 
மூக்கில் மருந்துவிடுவதன் மூலம், தொண்டையில், ஏதேனும் படிந்திருந்தால் அது உள்ளே கொண்டு சென்றுவிடும். இதனால், இருமலை  கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
 
சிலருக்கு அலர்ஜியால், கூட இருமல் ஏற்படலாம். அத்தகைய இருமலின் போது, ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை உங்களிடமிருந்து தள்ளி வைத்தாலே  போதுமானது. புகைப்பிடிப்பதனால் நுரையீரலில் தொற்று ஏற்பட்டும், இருமல் உண்டாகும், ஆகையால் இருமல் உள்ள நேரங்களில் புகைபிடிப்பதை தவிர்க்க  வேண்டும்.
 
இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்கள் அடிக்கடி கை கழுவ வேண்டும், அவ்வாறு சுத்தமாக இருப்பதினால் நோய் தொற்றுக்கான வாய்ப்பு குறையும். சில நேரங்களில் நாம் உட்கொள்ளக்கூடிய மருந்துகளால் கூட, அலர்ஜி ஏற்பட்டு தொடர் இருமலை சந்திக்க நேரிடும். எனவே, அவ்வாறான ஒவ்வாமைகளை உணரும் பொழுது உடனடியாக அத்தகைய மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திவிட வேண்டும்.
 
இருமல் ஏற்பட்ட இரண்டு தினங்களுக்கு, வீட்டில் தயாரிக்க கூடிய மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் தொடர் இருமலுடன் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.