செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (22:40 IST)

வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Peanuts
நிலத்திற்கு அடியில் விளையும் தாவர வகையைச் சேர்ந்தது நிலக்கடலை. இந்த வேர்க்கடலையில் இருந்து புரதச் சத்து கிடைக்கிறது.

பொதுவாக மாமிசங்கள், முட்டை, காய்கறிகளைவிட இந்த வேர்க்கடலையில் அதிக புரதச் சத்து கிடைப்பதாக உணவு  நிபுணர்கள் கூறுகின்றனர்,.

இந்த வேர்க்கடலை மணலில் வறுத்தும், நீரில் வேகவைத்தும், உணவில் பரிமாறியும் மக்கள் சாப்பிட்டு வரும் நிலையில், இந்த வேர்க்கடலையை  நீரில் சில மணி நேரம் ஊறவைத்து சாப்பிடும் போது உடலுக்கு நன்மை அதிகம் எனவும் கூறப்படுகிறது.

வேர்க்கடலையில், புரதச்சத்துகள் மட்டுமின்றி, பொட்டாசியம், பாஸ்பரஸ், விட்டமின் பி, மெக்னீசியம் ஆகிய சத்துகளும் உள்ளதாகவும், முக்கிய ஆரோக்கிய  தீனியாகவும் இது உள்ளாது.