வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 12 ஜூன் 2016 (21:10 IST)

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க உதவும் கஸ்தூரி மஞ்சள்

பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். கடைகளில் நிறைய லோஷன்களும், க்ரீம்களும் கிடைக்கின்றன


 

 
அவைகளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்ந்து விடாது. 
 
கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் அல்லது மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் போட்டுத் சிறுது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும். 
 
இது போட்டதுமே உடனடியாக முடி நீங்கி விடாது. நாளடைவில் தான் போகும்; ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது. ஏதாவது லோஷன் போட்டு, இந்த அனாவசிய முடிகளைப் போக்கியபின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் பவுடரை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம்.
 
தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.
 
குளிக்கும் போது போட முடியாதவர்கள் தினமும் நேரம் கிடைக்கும் போது இந்த பவுடரை முகத்தில் போட்டு நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும்.