1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. தலங்கள்
Written By Sasikala

குருபகவானை வழிப்படும் முக்கிய பரிகார தலங்கள்

குருபகவானை வழிப்படும் முக்கிய பரிகார தலங்கள்

சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி குரு பகவானை (வியாழன்) வழிபாடு முக்கியமானதாகும்.


 


எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற குரு பகவானை அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
 
குருபகவானை வழிபட்டு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால், வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். அப்படிப்பட்ட குருத்தலங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். ஒவ்வொன்றாக சென்று குரு பகவானைத் தரிசிப்பது வாழ்வில் நன்மை பயக்கும். குருப் பெயர்ச்சியன்று குரு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பானாது.  ஒருவரது ராசிக்கு, 1,4,6,8,10,12 ஆகிய இடங்களீல் குரு சஞ்சரிக்கும்போது கொஞ்சம் கெடு பலன்கள் நிகழக்கூடும்.
 
கும்பகோணம்: 
 
கும்பகோணத்தில், மகா மகக்குளமானபொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில்இதுவும் ஒன்று. இங்குள்ள இறைவனை காசி விஸ்வநாதர் என்றும்,  காசி விசாலாட்சி, தேனார் மொழிஎன்றும் அழைக்கிறார்கள்.
 
ஆலங்குடி:
 
குருபகவானுக்குரிய விஷேஷத் தலமாக ஆலங்குடி விளங்குகிறது.  கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால், இவரை 24 முறை வலம் வந்த், 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். வியாழக்கிழமகளில் மஞ்சள் நிற ஆடை அணிவித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.
 
மயிலாடுதுறை: 
 
இதுவும் ஒரு குரு பரிகார தலமாகும். இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமுர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோவிலில் தட்சிணாமுர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
குரு பகவானுக்கு உகந்தவை:
 
ராசி: தனுசு, மீனம்
அதி தேவதை: வியாழன்
நிறம்: மஞ்சள்
தானியம்: கடலை
உலோகம்: தங்கம்
மலர்: முல்லை
ரத்தினம்: புஷ்பராகம்
ஸ்தல விருட்சம்: பூலைச்செடி
 
காயத்ரி மந்திரம்:
 
விவ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.