1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Geetha Priya
Last Modified: சனி, 20 செப்டம்பர் 2014 (18:00 IST)

வருகிறது ஒலிம்பஸ் ஹேஸ் ஃபாலன் இரண்டாம் பாகம்

சென்ற வருடம் வெளியான இரு படங்கள் முக்கியமானவை. அதன் தரத்துக்காக அல்ல, அதில் வெளிப்படும் ஹாலிவுட் சினிமாவின் புதிய நகர்வுக்காக.
ஹாலிவுட்டில் தயாராகும் ஆக்ஷன் படங்களின் வில்லன்கள் அமெரிக்காவுக்கு எதிரி நாடுகளைச் சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள். கதை நடக்கும் இடங்களும் பெரும்பாலும் எதிரி நாடுகளின் பகுதிகளாகதான் இருக்கும். மாறாக சென்ற வருடம் வெளியான இரு படங்களில் - ஒயிட் ஹவுஸ் டவுன், ஒலிம்பஸ் ஹேஸ் ஃபாலன் - கதை நடப்பது அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில். இரண்டு படங்களின் கதைகளுமே வெள்ளை மாளிகை தீவிரவாதிகளால் தாக்கப்படுவதை பின்னணியாகக் கொண்டவை. இரண்டில் ஒலிம்பஸ் ஹேஸ் ஃபாலன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
 
அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் தீவிரம் காட்டுகிறது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான மில்லியனியம். இரண்டாவது பாகத்தை இயக்க ஃப்ரெட்ரிக் பாண்டுடன் ஒப்பந்தம் போட்டனர். அவரது தேதிகள் மில்லியனியத்துக்கு ஒத்து வராததால் அவரை மாற்றிவிட்டு வேறு இயக்குனரை தேடி வருகிறார்கள்.