1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Geetha priya
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (12:34 IST)

ஏஞ்சலினா ஜோலி படம்னா அது எங்களுக்குதான்

நடிகை ஏஞ்சலினா ஜோலி விரைவில் ஆரம்பிக்கயிருக்கிற பை த ஸீ (By The Sea) படத்தின் அகில உலக விநியோக உரிமையை யூனிவர்சல் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. 
ஏஞ்சலினா ஜோலி போஸ்னியா போர் பின்னணியில் இன் த லேண்ட் ஆஃப் பிளட் அண்ட் ஹனி என்ற படத்தை தயாரித்து இயக்கி இயக்குனராகவும் முத்திரை பதித்தார். அதையடுத்து அவர் தயாரித்து இயக்கி வரும் படம் அன் ப்ரோக்கன்.
 
இந்தப் படமும் போரைப் பற்றியதுதான். படத்தின் வேலைகள் இன்னும் முடியவில்லை. இந்த வருடம் டிசம்பரில் படத்தை வெளியிடுவதென முடிவு செய்துள்ளனர். இதன் உலக அளவிலான விநியோக உரிமையை யூனிவர்சல் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. அவர்கள்தான் படத்தை வெளியிடுகின்றனர்.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து பை த ஸீ என்ற படத்தை ஜோலி இயக்கி நடிக்கப் போகிறார். தயாரிப்பும் அவரே. இதில் விசேஷம் ஜோலியுடன் அவரது காதலர் பிராட் பிட்டும் நடிக்கிறார். இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்தது 2005 -ல் வெளியான மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித் படத்தில்.

இதில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஜெனிபர் அனிஸ்டனுடனான உறவை முறித்து ஜோலியுடன் ஜாலியாக சுற்ற ஆரம்பித்தார் பிட். இவர்களுக்கு தத்தெடுத்த குழந்தைகளுடன் சேர்த்து 6 குழந்தைகள் உள்ளன. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
 
பை த ஸீ யில் ஜோலி, பிட் இணைந்து நடிப்பதால் ரசிகர்களுக்கும் ஓர் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளராகவும் பிட் இணைந்துள்ளார். அன் ப்ரோக்கன் படம் முடியும் முன்பே ஜோலி அதற்கடுத்து இயக்கப் போகும் பை த ஸீ படத்தின் உலக அளவிலான விநியோக உரிமையை யூனிவர்சல் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. கேட்டால், ஜோலி சூப்பராக கதை சொல்கிறார் என்று புளகாங்கிதமடைகிறார்கள்.