திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (10:59 IST)

'வாரிசு’ சிங்கிள் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு!

Varisu Poster
தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றாய் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் 
 
இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் புரமோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
விஜய் படத்திற்கு முதல் முதலாக தமன் இசையமைத்துள்ள நிலையில் விஜய்க்காக அவர் எப்படி இந்த பாடலை கம்போஸ் செய்திருப்பார் என்பதை அறிய விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
வாரிசு படத்தின் சிங்கிள் புரோமோ 30 விநாடிகள் முதல் 45 விநாடிகள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஏற்கனவே கடந்த வாரம் வாரிசு படக்குழுவினர் அடுத்த வாரம் முதல் அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் என்று கூறிய நிலையில் தற்போது இன்று முதல் அறிவிப்பு தொடங்கியுள்ளதாக தெரிகிறது
 
Edited by Siva

varisu single