1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Ravivarma
Last Updated : புதன், 9 ஜூலை 2014 (15:36 IST)

யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸ் - தொடரும் எந்திரங்களின் ஆதிக்கம்

இந்த வார யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸிலும் ட்ரான்ஸ்ஃபார்மஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
5. How to Train Your Dragon 2
இந்த அனிமேஷன் படம் சென்ற வார இறுதியில் (ஜூலை 4 முதல் 6 வரை) 9 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 140.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
4. Deliver Us from Evil
சென்ற வாரம் வெளியான இந்த ஹாரர் படம் ரசிகர்களால் விரும்பப்படும் படமாக உள்ளது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 9.7 மில்லியன் டாலர்கள்.
 
3. 22 Jump Street
இந்த ஆக்ஷன் காமெடி தொடர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல கலெக்ஷனை பெற்று வருகிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 9.8 மில்லியன் டாலர்கள். இதுவரை யுஎஸ்ஸில் 159.3 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது
 

2. Tammy
மெலிசா மெக்கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்தாலும் முதல் வாரத்திலேயே போட்ட பட்ஜெட்டை - 20 மில்லியன் டாலர்கள் - கடந்துள்ளது. ஜூலை 2ஆம் தேதி வெளியான இப்படம் 6ஆம் தேதி வரை 33.3 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது.
1. Transformers: Age of Extinction 
எந்திரங்கள்தான் இந்த வாரமும் முதலிடத்தில் சென்ற வார இறுதியில் 37.1 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் இதுவரை யுஎஸ்ஸில் 175.4 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. இது பத்து தின வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.