திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2020 (09:36 IST)

சம்யுக்தாவுக்கு இரண்டு குறும்படங்கள்: மாஸ் காட்டிய கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றப்பட்ட நபர் குறித்த தகவல்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆரி, ரமேஷ், பாலாஜி, அனிதா, நிஷா, சனம் மற்றும் சோம் ஆகிய 7 பேர் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டனர்.
 
ஆனால் திடீரென பிக்பாஸ் கொடுத்த டாப்பிள் கார்டு அனிதாவுக்கு கிடைத்ததை அடுத்து அனிதா தன்னை எவிக்சன் பட்டியலில் காப்பாற்றிக் கொண்டு சம்யுக்தாவை நாமினேட் செய்ததால் சம்யுக்தா இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இணைந்தார்
 
இதனையடுத்து நேற்று வெளியான தகவலின்படி சம்யுக்தாவுக்கு குறைந்த வாக்குகள் தான் கிடைத்ததாகவும் அவர் வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
சற்று முன் சற்று முன் வெளியான தகவலின்படி சம்யுக்தா வெளியிடப்பட்டதாகவும் வெளியேற்றப்படுவதற்கு முன் அவருக்கு இரண்டு குறும்படங்களை கமலஹாசன் போட்டு காண்பித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தாய்மை குறித்து ஆரி கூறியது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாக சம்யுக்தா கூறியது குறித்த ஒரு குறும்படமும், வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா கூறிய ஒரு குறும்படமும் இன்று ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த சீசனில் இதுவரை குறும்படங்கள் போடாமலும் போட்டியாளர்களை கண்டிக்காமலும் இருந்த கமல்ஹாசன் இன்று மாஸ் கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது