வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 20 மே 2016 (14:01 IST)

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் சீரிஸின் 5 வது பாகம் - ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் த லாஸ்ட் நைட்

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் சீரிஸின் 5 வது பாகம் - ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் த லாஸ்ட் நைட்

ஹாலிவுட்டின் வெற்றிகரமான சீரிஸ்களில் ஒன்று ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்.


 


ட்ரான்ஸ்ஃபார்மர்ஸின் நான்கு பாகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. ஐந்தாவது பாகம் வரும் ஜுன் 6 -ஆம் தேதி தொடங்குகிறது. இதன் பெயரை பாராமவுண்ட் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் சீரிஸின் ஐந்தாவது பாகத்துக்கு, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் - த லாஸ்ட் நைட் (Transformers: The Last Knight) என பெயர் வைத்துள்ளனர்.
 
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் சீரிஸின் இயக்குனர் மைக்கேல் பே இந்த ஐந்தாவது பாகத்தை இயக்குகிறார். ஜுன் 6 -ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தை தொடங்கும் முன்பே படவெளியீட்டு தேதியை அறிவிப்பது ஹாலிவுட் ஸ்டைல். 
 
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸின் இந்த ஐந்தாவது பாகம் 2017 ஜுன் 23 -ஆம் தேதி வெளியாகிறது.