1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (19:39 IST)

ஹாலிவுட்டிலும் பெயர் பிரச்சனை

ஜே.ஆர்.ஆர்.டோல்கின் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து த லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மூன்று பாகங்களை இயக்கினார் பீட்டர் ஜாக்சன். அடுத்து அவர் கையிலெடுத்தது டோல்கினின் த ஹாபிட் நாவல்.
 
த ஹாபிட்டை படமாக்க வேண்டும் என்று முடிவு செய்த போது இரண்டு பாகங்களாக அதனை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். முதல் பாகம் த ஹாபிட் - ஆன் அன்எக்ஸ்பெக்டட் ஜர்னி, இரண்டாவது பாகம் த ஹாபிட் - தேர் அண்ட் பேக் எகெய்ன்.
முதல் பாகத்தை தொடங்கியதும் முடிவு மாறியது. மூன்று பாகங்களாக எடுப்பது என தீர்மானித்தனர். முதல் பாகத்தின் பெயரில் மாற்றமில்லை, ஆன் அன்எக்ஸ்பெக்டட் ஜர்னி. இரண்டாவது பாகம் த ஹாபிட் - த டிஸாலேஷன் ஆஃப் ஸ்மக். மூன்றாவது பாகம் ஏற்கனவே முடிவு செய்த தேர் அண்ட் பேக் எகெய்ன்.
 
இரண்டு பாகங்கள் வெளிவந்த நிலையில் மூன்றாவது பாகம் இந்த வருடம் டிசம்பர் 17 வெளியாக உள்ளது. தேர் அண்ட் பேக் எகெய்ன் என்பது அவ்வளவு ஈர்ப்பாக இல்லை என்று த பேட்டில் ஆஃப் பைவ் ஆர்மீஸ் என மாற்றினர். தற்போது அதிலும் திருப்தியில்லாமல் இன்டூ த ஃபயர் என வைத்துள்ளனர். 
 
தயாரிப்பு தரப்புக்கு, தேர் அண்ட் பேக் எகெய்ன் என்றே வைத்தால் என்ன என்ற யு டர்ன் யோசனையும் உள்ளது.
 
எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா ரோஜாதானே.