Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரியங்கா சோப்ராவிற்கு வந்த விபரீத ஆசை....


Murugan| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (14:29 IST)
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வெளிப்படுத்தியுள்ள ஆசை அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

 
பாலிவுட்டில் புகழுடன் இருக்கும் போதே, ஹாலிவுட் பக்கம் சென்றவர் பிரியங்கா சோப்ரா. தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் ஹாலிவுட்டில் தாக்குப் பிடிக்காத நிலையில், பிரியங்கா சோப்ரா மட்டுமே அங்கு நிலைத்து நின்று சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
 
குவாண்டிகோ என்ற ஆங்கில டிவி தொடரில் நடித்து புகழடைந்த அவர், சமீபத்தில் வெளியான ‘பே வாட்ச் ’ படத்தில் நடித்திருந்தார். அவரோடு ராக் என அழைக்கப்படும் ஹாலிவுட் நடிகர் வெயின் ஜாக்சன் நடித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாக அப்படம் சரியாக போகவில்லை என்றாலும், அப்படத்தில் பிரியங்கா சோப்ராவின் நடிப்பு அங்கு பலருக்கும் பிடித்திருந்தது.
 
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், வீட்டை சுத்தம் செய்யும் ஒரு பணியாளராக தான் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும், செடிகளுக்கு தண்ணீர் விடுவது போன்ற வேலைகளை செய்யும் வேலைக்காரப் பெண்ணாகவே இருக்கவே தான் விரும்புவதாகவும், அதுவே எப்போதும் தன் சிந்தனையில் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
வேலைக்காரியாக இருக்கவே விரும்புவதாக பிரியங்கா சோப்ரா கூறியிருப்பது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :