1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (19:43 IST)

துருவ நட்சத்திரம் பட பாடல் வெளியீடு ! இணையதளத்தில் வைரல்

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மனம் என்ற பாடல் வெளியாகவுள்ளது.
 
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியாமல் பணப்பிரச்சனைகளில் சிக்கியுள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கௌதம் மேனன். இப்போது விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரம்முடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
படத்தை பைனான்ஸ் பிரச்சனைகளை சிக்கவைத்தது இயக்குனர் கௌதம் மேனன்தான் என நம்பும் விக்ரம் அவர் மேல் கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிற்து. துருவ நட்சத்திரம் படம் ரிலீஸாக வேண்டுமென்றால் இன்னும் 6 நாட்கள் விக்ரம்மை வைத்து கௌதம் மேனன் ஷூட் செய்ய வேண்டும். ஆனால் கௌதம் மேல் செம கோபத்தால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என சொல்லிவிட்டாராம் விக்ரம். இதனால் விக்ரம் இல்லாமலேயே பட்டி டிங்கரிங் பார்த்து துருவ நட்சத்திரத்தை ரிலிஸ் செய்ய கௌதம் மேனன்.முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மனம் என்ற சிங்கிள் பாடலை விரைவில் ரிலிஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் கௌதம் மேனன். இதன் மூலம் படத்தின் ரிலீஸ் வேலைகளை அவர் ஆரம்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது.