திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 மார்ச் 2024 (08:38 IST)

ஆஸ்கர் விருதுகளை அள்ளி சென்ற ஓப்பென்ஹெய்மர், புவர் திங்ஸ்! – முழு பட்டியல்!

Oscars
ஹாலிவுட்டின் மிக உயரிய விருதாக போற்றப்படும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓப்பென்ஹெய்மர், புவர் திங்ஸ் படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளது.



96வது ஆஸ்கர் விருதுகள் விழா கோலகலமாக ஹாலிவுட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருது வென்ற படங்கள் குறித்த முழு பட்டியல்:
 
  • சிறந்த திரைப்படம் – ஓபென்ஹெய்மர்
  • சிறந்த நடிகர் – சிலியன் மர்ஃபி (ஓபென்ஹெய்மர்)
  • சிறந்த துணை நடிகர் – ராபர்ட் டோனி ஜூனியர் (ஓபென்ஹெய்மர்)
  • சிறந்த நடிகை – எமா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
  • சிறந்த துணை நடிகை – டா’வைன் ஜாய் ராண்டால்ப் (தி ஹேண்டோவர்ஸ்)
  • சிறந்த இயக்குனர் – கிறிஸ்டோபர் நோலன் (ஓபென்ஹெய்மர்)
  • சிறந்த அனிமேஷன் படம்  - தி பாய் அண்ட் தி ஹெரான் (ஹயாவோ மியாசாகி)
  • சிறந்த தழுவிய திரைக்கதை – அமெரிக்கன் ஃபிக்‌ஷன்
  • சிறந்த ஒரிஜினல் திரைக்கதை – அனாடமி ஆஃப் ஃபால்
  • சிறந்த ஒளிப்பதிவு – ஓபென்ஹெய்மர்
  • சிறந்த உடை அலங்காரம் – புவர் திங்ஸ்
  • சிறந்த ஆவணப்படம் – 20 டேஸ் இன் மரியுபோல்
  • சிறந்த ஆவணக் குறும்படம் – தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
  • சிறந்த எடிட்டிங் – ஓபென்ஹெய்மர்
  • சிறந்த உலகப்படம் – தி ஸோன் ஆஃப் இண்ட்ரெஸ்ட்
  • சிறந்த பிண்ணணி இசை – ஓபென்ஹெய்மர்
  • சிறந்த பாடல் – What was I made for? – பார்பி
  • சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – காட்ஸில்லா மைனஸ் ஒன்
 
இந்த விருது பட்டியலில் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரையில் இருந்து மார்ட்டின் ஸ்கார்சஸியின் கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் ஒரு விருதைக் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K