வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Lenin AK
Last Modified: செவ்வாய், 7 அக்டோபர் 2014 (14:28 IST)

அவர் என்னை ஒரு பையனாகதான் பார்த்தார் - ரசிகர்களை மனமுடையச் செய்த டைட்டானிக் காதலி

1997 -இல் வெளிவந்த டைட்டானிக் படத்தை அவ்வளவு சுலபத்தில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். லியோனார்டோ டிகாப்ரியோவும், கேட் வின்ஸ்லெட்டும் உலக காதலர்களின் மனங்களில் எப்போதும் வீற்றிருப்பார்கள்.
 
டைட்டானிக் வெற்றியின் முக்கிய காரணம் லியோனார்டோவும், கேட் வின்ஸ்லெட்டும் நிஜக்காதலர்கள் எனும் அளவுக்கு படத்தில் ரசிகர்கள் ஒன்றிப்போனதுதான். அவர்கள் இணைய வேண்டும் என்று நினைக்காதவர்கள் இல்லை.
ஆனால், எங்களுக்குள் எப்போதும் - படப்பிடிப்பின் போதுகூட ரொமான்ஸே இருந்ததில்லை என்று கூறியிருக்கிறார் கேட் வின்ஸ்லெட். என்னை லியோ ஒரு பையனாகதான் பார்த்தார். எங்களுக்குள் இருந்தது வெறும் ப்ரெண்ட்ஸ்ஷிப் மட்டும்தான் துளிகூட ரொமான்ஸ் இருந்ததில்லை என்று ரசிகர்களின் கற்பனையை சிதறடித்துள்ளார்.
 
ஸ்ரீதேவியும் நானும் காதலிப்பதாகதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் எங்களுக்குள் அப்படி எதுவும் இருந்ததில்லை என்று கமல் சொன்னபோது ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதே ஏமாற்றம்தான் ஹாலிவுட் ரசிகர்களுக்கும்.
 
மொழி மாறினாலும் கமலும், ஸ்ரீதேவியும், ஏமாறும் ரசிகர்களும் எங்கும் இருக்கவே செய்கிறார்கள்.