1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 6 ஜூலை 2015 (10:12 IST)

உலக அளவில் வசூலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறிய ஜுராஸிக் வேர்ல்ட்

உலக அளவில் வசூலில் முதலிடத்தில் அவதாரும், இரண்டாவது இடத்தில் டைட்டானிக்கும் உள்ளன. இரண்டுமே இரண்டு பில்லின்களுக்கு மேல். இந்த பிரமாண்ட வசூலை இப்போதைக்கு எந்தப் படமும் தாண்ட வாய்ப்பில்லை.
மூன்றாவது இடத்தில் மார்வெல்ஸ் அவெஞ்சர்ஸ் உள்ளது. 1,518.6 மில்லியன் டாலர்கள். அதாவது 1.518 பில்லியன். அதையடுத்து நான்காவது இடத்தில் ஃப்யூரியஸ் 7. 1,511.6 மில்லியன் டாலர்கள். 1.511 பில்லியன். 
 
ஐந்தாவது இடத்தில் இந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் இருந்தது. அதன் 1,383.5 மில்லியன் டாலர்கள் வசூலை ஜுராஸிக் வேர்ல்ட் முறியடித்துள்ளது. அப்படம் 1,385 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்துக்கு முன்றியுள்ளது. இந்த பிரமாண்ட வசூலில் 558.1 மில்லியன் டாலர்களை யுஎஸ்ஸில் வசூலித்துள்ளது. மீதி 826.9 மில்லியன் டாலர்களை வெளிநாடுகளில். 
 
ஃப்யூரியஸ் 7 படத்தின் வசூலை முறியடிக்க இன்னும் 125 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஜுராஸிக் வேர்ல்ட் வசூலிக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.