வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 8 பிப்ரவரி 2015 (11:51 IST)

ஜெனிஃபர் லாரன்ஸ் நடிப்பில் தயாராகும் பாஸஞ்சர்ஸ்

பாஸஞ்சர்ஸ் என்ற படத்தைக் குறித்து ஹாலிவுட் ரொம்ப நாளாக பேசிக் கொண்டிருக்கிறது. கியானு ரீவ்ஸ் உடன் ரேச்சல் மெக்ஆடம்ஸ் நடிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் தற்போது பாஸஞ்சர்ஸில் பயணிப்பவர்கள் முற்றியலும் மாறியிருக்கிறார்கள்.
 
இந்த வருடம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும், த இமிட்டேஷன் கேம் படத்தை இயக்கிய மோர்டன் டில்டம் பாஸஞ்சர்ஸை இயக்குகிறார். சிறந்த நடிப்புக்காக ஆஸ்கர் விருது வாங்கிய ஜெனிஃபர் லாரன்ஸ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். 
 
முக்கியமான வேடத்தில் தோன்றும் இன்னொருவர் கிரிஸ் ப்ரட். கேலக்ஸி ஆஃப் கார்டியன், ஜுராஸிக் வேர்ல்ட் என முக்கியமான படங்களில் நடித்து முன்னணி வரிசையில் இடம்பிடிக்க காத்திருக்கும் இளம் நடிகர்.
 
தயாரிப்பாளர்கள் இந்த இருவரின் பெயர்களை முடிவு செய்திருந்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் இதுவரை நடிக்க தங்களின் பூரண சம்மதத்தை தெரிவிக்கவில்லையாம்.
 
அதாவது பாஸஞ்சர்ஸ் மீண்டும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.