திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Updated : புதன், 4 ஜனவரி 2023 (19:10 IST)

நகரத்தை விட்டு கிராமத்திற்கு சென்றால் 1 மில்லியன் யென் பரிசு: ஜப்பான் அறிவிப்பு!

tokyo
நகரத்தை விட்டு கிராமத்திற்கு சென்றால் 1 மில்லியன் யென் பரிசு: ஜப்பான் அறிவிப்பு!
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ நகரத்தை விட்டு புறநகர் அல்லது கிராமத்திற்கு சென்றால் ஒரு மில்லியன் யென் பரிசு அளிக்கப்படும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. 
 
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதை அடுத்து நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனை கணக்கில் கொண்டு ஒரு குழந்தையுடன் உள்ள ஒரு குடும்பம் நகரத்தை விட்டு அல்லது கிராமத்திற்கு சென்றால் ஒரு மில்லியன் யென் பரிசு அளிக்கப்படும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது 
 
ஒரு மில்லியன் என்பது 6.5 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டு குழந்தைகளுடன் உள்ள குடும்ப நகரை விட்டு சென்றால் 3 மில்லியன் யென் பரிசு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் டோக்கியோ நகரை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva